இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர்
Published on

மீன்சுருட்டி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மெய்க்காவல் புத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி பத்மா(வயது 40). இவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவருடைய கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து போனார். இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். தனது தங்கை ராஜேஸ்வரி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள ஏ.ஆர்.ஆர். காலனியில் உள்ள தனது சின்ன தாத்தா சின்ன பிள்ளை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்ந்து வந்தார். இந்நிலையில் அந்தப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் மகன் ரமேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ராஜேஸ்வரி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. பிறந்த பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அந்த குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. இதனால் பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் ராஜேஸ்வரிக்கு இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கணவரிடம் கோபித்துக் கொண்டு, ராஜேஸ்வரி தனது அக்கா வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அக்கா வீட்டில் படுத்து தூங்கிய ராஜேஸ்வரி அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பத்மா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com