

தூத்துக்குடியைச் சேர்ந்த நேக்சன் (வயது 20) என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-III-ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராஜ்குமார் நேற்று (29.1.2026) நேக்சன் என்பரை குற்றவாளி என தீர்ப்பளித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த வடபாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் வடபாகம் காவல் நிலைய காவல்துறையினர், அப்போதைய வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.