வேப்பனப்பள்ளி அருகே கோதண்டராம சாமி கோவில் தேர்த்திருவிழா

வேப்பனப்பள்ளி அருகே கோதண்டராம சாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது.
வேப்பனப்பள்ளி அருகே கோதண்டராம சாமி கோவில் தேர்த்திருவிழா
Published on

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தில் உள்ள கோதண்டராம சாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை பூஜைகள், சாமி வீதி உலா நடந்தது. விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சாமி அமர்த்தப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com