கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

நாமக்கல்:

கிருத்திகை

மாசி மாத கிருத்திகை, சஷ்டியையொட்டி நேற்று நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் பாலதண்டாயுதபாணி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து முருகன் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மகாதீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி

கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயர ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் பச்சமலை முருகன், அனிச்சம்பாளையம் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜாசாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

பேட்டை பகவதி அம்மன் கோவில்

பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com