குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு

குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு
ஆலங்குடி குருபகவான்.
ஆலங்குடி குருபகவான்.
Published on

நீடாமங்கலம்:-

நவக்கிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் நேற்று குருவார வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com