ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

நீடாமங்கலம்:-

ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

குருபகவான் கோவில்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய பரிகார தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கடந்த 13-ந் தேதி பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இக்கோவிலில் குருவார வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

தங்க கவசம்

மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருவாரத்தையொட்டி குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com