ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு

குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு நடந்தது
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு
Published on

நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இங்கு குருவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவான் தங்க கவசத்துடன் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் வியாழக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் ஆர்வத்துடன் குருபகவான் கோவிலுக்கு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com