ஆடி கிருத்திகை வழிபாடு

காக்கையாடி, ஆறுமுக சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு நடந்தது.
ஆடி கிருத்திகை வழிபாடு
Published on

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. விழாவில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், லட்சார்ச்சனை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து விபூதி அலங்காரம், மஞ்சள் அலங்காரம், சந்தன காப்பு போன்ற அலங்காரங்களில் ஆறுமுக சுப்ரமணியசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முடிவில் விடையாற்றி வழிபாட்டில் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com