

திருவள்ளூர்,
தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியத்துக்கான வருட வருமான உச்ச வரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நல வாரிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ஜலேந்தர் சாமி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் செல்வராஜ், ஆஞ்சநேயன், அண்ணாமலை, ஆறுமுகம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராம கோவில் பூசாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் பூக்கட்டுவோர் பேரவையின் மாநில செயலாளர் வேணு நன்றி கூறினார்.