திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தெப்போற்சவம் தொடக்கம்

புஷ்கரணியின் கரைகளில் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தெப்போற்சவம் தொடக்கம்
Published on

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் தெப்போற்சவம் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை உற்சவர்களான சீதா, லட்சுமணர் மற்றும் ராமச்சந்திரமூர்த்திக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது.

பின்னர் உற்சவர்களான சீதா, லட்சுமணர், ராமச்சந்திரமூர்த்தியை அருகில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணிக்கு கொண்டு வந்தார்கள். அங்கு தெப்பத்தேரில் உற்சவர்களை எழுந்தருள செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு 7 முதல் 8 மணி வரை தெப்போற்சவம் நடந்தது. உற்சவ மூர்த்திகள் தெப்பத்தேரில் எழுந்தருளி புஷ்கரணியில் வலம் வந்தபோது புஷ்கரணியின் கரைகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி நாகரத்னா, கூடுதல் செயல் அதிகாரி ரவி மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com