2 ஆண்டுக்கு பின் ஜவுளிக்கடைக்காரர் கைது

திருக்கனூர் பகுதியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்து தலைமறைவான ஜவுளி கடைக்காரர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
2 ஆண்டுக்கு பின் ஜவுளிக்கடைக்காரர் கைது
Published on

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்து தலைமறைவான ஜவுளி கடைக்காரர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

ஜவுளிக்கடைக்காரர்

திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான சேனிப் பேட்டையை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58).இவர் திருக்கனூர் கடை வீதியில் பல ஆண்டுகளாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு அறிமுகமான பொது மக்களிடம் மாதம் குலுக்கல் சீட்டு நடத்தப்பட்டு பரிசு விழுபவர்களுக்கு பணம் கொடுத்தார். இதனை நம்பிஅவரிடம் ஏராளமான பொதுமக்கள் சீட்டு பணம் கட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு குலுக்கல் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் தராமல் பல லட்சம் மோசடி செய்து விட்டு தாமோதரன் குடும்பத்துடன் தலைமறைவானார்.

2 ஆண்டுக்கு பின் கைது

பாதிக்கப்பட்ட சித்தலம்பட்டை சேர்ந்த நாவாத்தாள் உள்பட சிலர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை தேடி வந்தனர்.

திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் புனித ராஜா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் ரமேஷ், பழனி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணையில், அவர் தஞ்சாவூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தாமோதரனை அங்கு சென்று தாமோதரனை கைது செய்தனர்.

2 ஆண்டுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்டவர் திரண்டனர்.

பலகோடி மோசடி?

முதல் கட்ட விசாரணையில், அவர் பொதுமக்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com