தை அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தை அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 4 நாட்கள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 

மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தை மாத அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com