தனி ஒருவன் 2

ஜெயம் ரவியும், அவருடைய அண்ணன் மோகன்ராஜாவும் ‘ஜெயம்,’ ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,’ ‘சந்தோஷ் சுப்பிரமணியம்,’ ‘தனி ஒருவன்’ ஆகிய 4 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். அந்த 4 படங்களையும் மோகன்ராஜா டைரக்டு செய்தார். ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தார். 4 படங்களுமே பெரிய வெற்றி பெற்றன.
தனி ஒருவன் 2
Published on

மோகன்ராஜா டைரக்ஷனில் மீண்டும் ஜெயம் ரவி தனி ஒருவன்-2 தயாராகிறது

குறிப்பாக, தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், வசூல் சாதனையும் செய்தது. அந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். வில்லனாக அரவிந்தசாமி நடித்தார். தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், தனி ஒருவன்-2 என்ற பெயரில் தயாராகிறது.

அதில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். மோகன்ராஜா டைரக்டு செய்கிறார். ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜெயம் ரவியும், அவருடைய அண்ணன் டைரக்டர் மோகன்ராஜாவும் 5-வது முறையாக இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com