வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

திருவள்ளூரை அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). இவர் நேற்று முன்தினம் திருவள்ளூரில் இருந்து ஆட்டோ மூலம் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் திருவள்ளூரை அடுத்த பட்டரைப் பெருமந்தூர் சோதனைச்சாவடி அருகே டீ குடிப்பதற்காக ஆட்டோவை நிறுத்தினார். அப்போது அந்த டீக்கடையில் இருந்த பட்டரைபெருமந்தூரை சேர்ந்த இளம்பரிதி என்கின்ற சுதா(36) என்பவர் விக்னேசிடம் வீண் தகராறு செய்தார்.

மேலும் ஆத்திரம் அடைந்த அவர் விக்னேசை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இளம்பரிதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com