சாலையில் முதியவர் பிணம்

சாலையில் முதியவர் பிணமாக கிடந்தார்.
சாலையில் முதியவர் பிணம்
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட திருமாந்துறை-கைகாட்டி சாலையில் நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், வெள்ளை நிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com