கடலில் குளித்தபோது சிறுவன் திடீர் சாவு

புதுவை கடற்கரைக்கு குளிக்க சென்ற சிறுவன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சாவு
கடலில் குளித்தபோது சிறுவன் திடீர் சாவு
Published on

வானூர்

  கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆக்ரா வில்லேஜ் டாடா குளம் பகுதியை சேர்ந்தவர் சிவநாதன். பெங்களூருவில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்று குளித்தனர்.

      அப்போது சிவநாதனின் மகன் மான்வித்தின் (12) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் மான்வித்தின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com