பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

நாகூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
Published on

நாகூர்:

நாகை வெளிப்பாளையம் முன்சிபல் பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் சவுந்தரராஜன் (வயது 25).இவர் தனது நண்பருடன் நாகூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நாகைக்கு செல்ல ஒரு தனியார் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது தடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி சவுந்தரராஜன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து.தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சவுந்தரராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com