மீன் பிடிக்கச்சென்ற சிறுவன், தடுப்பணையில் தவறி விழுந்து பலி

அகரம் சீகூர் கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் தடுப்பணையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
சிறுவன் தவறி விழுந்து இறந்த தடுப்பணையை படத்தில் காணலாம்.
சிறுவன் தவறி விழுந்து இறந்த தடுப்பணையை படத்தில் காணலாம்.
Published on

மங்களமேடு:

மீன்பிடிக்க சென்றான்

அரியலூரை சேர்ந்த கவியரசனின் மகன் ஹரிரோஜன்(வயது 10). இவன் ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாய் கனிமொழியுடன், அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு ஹரிரோஜன் வந்தான்.

நேற்று மதியம் தனது நண்பன், அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் ரித்திக்குடன் (12) அருகில் உள்ள வெள்ளாறு தடுப்பணையில் மீன்பிடிக்க ஹரிரோஜன் சென்றான். அப்போது அங்கு தேங்கியிருந்த நீரில் ஹரிராஜன் தவறி விழுந்தான்.

சாவு

இதைக்கண்ட ரித்திக் கூச்சல் போட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தான். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் ஹரிரோஜனை மீட்டு பார்த்தபோது, அவன் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், அங்கு விரைந்து வந்து ஹரிரோஜனின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பணையில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com