சாலையோர காய்கறி கடைக்குள் கார் புகுந்தது

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் கார் புகுந்தது. காய்கறி விற்ற பெண் படுகாயம் அடைந்தார்.
சாலையோர காய்கறி கடைக்குள் கார் புகுந்தது
Published on

மூலக்குளம்

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் கார் புகுந்தது. காய்கறி விற்ற பெண் படுகாயம் அடைந்தார்.

காய்கறி கடைக்குள் புகுந்த கார்

ரெட்டியார்பாளையம்-வில்லியனூர் மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே சாலையோர காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த காசிலிங்கம் (வயது 45) என்பவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவிக்கு மதிய உணவு வாங்குவதற்காக இந்திராகாந்தி சிலை சிக்னலில் இருந்து வில்லியனூர் மெயின் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 3-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளுக்குள் புகுந்தது.

பெண் படுகாயம்

இந்த விபத்தால் காய்கறிகள் சேதம் அடைந்ததோடு, காய்கறி கடை வைத்திருந்த குமாரி (55) என்ற பெண்ணிற்கு காலில் காயம் ஏற்பட்டது. கார் காய்கறி கடைக்குள் புகுந்ததை பார்த்த அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் அச்சமடைந்தனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தன.

விபத்து குறித்து தகவல் அறிந்த வடக்கு பகுதி போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காயமடைந்த குமாரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சாலையோர காய்கறி கடைகளால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஏற்கனவே இது போல 3 விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com