கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது - மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது என மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது - மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பலர் கூறினர். அது உண்மையாகவில்லை. கர்நாடகத்தில் இந்த கூட்டணி அரசு கவிழாது. காங்கிரசில் மூத்த தலைவர்கள், உண்மையானவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். நேரம் வரும்போது, அனைவரும் பதவியை தியாகம் செய்ய வேண்டும். கட்சி மேலிடம் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இவ்வாறு மந்திரி டி.கே. சிவக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com