67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்

67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்

67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்.
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து 67 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் விஜயா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் சசிதரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com