எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில் நடந்தது

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில் நடந்தது
Published on

நாகர்கோவில்,

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக மாதர் சங்க மாநில துணைச்செயலாளர் உஷாபாசி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தங்கம் நடேசன், ம.தி.மு.க. மகளிர் அணி மாநில துணைச்செயலாளர் ராணி செல்வின், குமரி மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகி சகுந்தலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாதர் சங்க மாவட்ட தலைவர் ரெகுபதி, மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சோமசுந்தரி, நகர தலைவர் அன்னசுகிர்தா, முன்னாள் நகரசபை தலைவர் ஜெமிலா ஜேம்ஸ், விஜிலா, பிரின்சிலி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்ட முடிவில் எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com