கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி

திருக்கனூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடங்டகியது.
கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
Published on

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் எதிர்வரும் பருவ மழைக்காலத்தை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் திருக்கனூர் வணிகர் வீதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியினை தொடங்கினர். இதன் காரணமாக வணிகர் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தொடர்ந்து பிள்ளையார் கோவில் வீதி, புதுநகர் பகுதி வழியாக வண்ணாங்குளம் வரை கால்வாய் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com