ஓங்கி ஒலிக்க காத்திருக்கும் பறை

ஜடா படம் மூலம் இயக்குனராக பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் குமரன் இயக்கி இருக்கும் பறை ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
ஓங்கி ஒலிக்க காத்திருக்கும் பறை
Published on

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ஆல்பம் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த ஆல்பம் சாங் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருவதால், பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் ஆல்பம் சாங் உருவாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள்.

பெரும்பாலான ஆல்பம் பாடல்கள் காதல், நடனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜடா படம் மூலம் இயக்குனராக பலருடைய கவனத்தை ஈர்த்த இயக்குனர் குமரன், பறை என்னும் ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார். இந்த பறை வழக்கமான ஆல்பம் பாடல்களை தாண்டி, உண்மை கதையை சமுதாயத்தில் பலரும் கவனிக்கப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன்.

பறை ஆல்பம் பாடலுக்கு பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இதன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த போஸ்டரை இயக்குனர் பா.இரஞ்சித் உள்ளிட்ட பலர் ஓங்கி ஒலிக்கட்டும் என்று பதிவு செய்து வாழ்த்தியிருந்தார்கள். இந்த பறை ஆல்பம் பாடல் மார்ச் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com