நிச்சயதார்த்தம் முடிந்தது... ஏ.ஆர்.ரகுமான் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா?

ஏ.ஆர்.ரகுமானுடைய மகளின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்று செய்தி வெளியானது இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருக்கிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்தது... ஏ.ஆர்.ரகுமான் மகளை திருமணம் செய்யும் நபர் யார் தெரியுமா?
Published on

இந்திய சினிமாவையே தன்னுடைய இசையின் மூலம் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கார் நாயகனாக அறியப்படும் இவர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜா ரகுமானுக்கும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த டிசம்பர் 29 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இடம்பெற்ற புதிய மனிதா பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com