

உலகெங்கிலும் உள்ள சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து, சுதந்திர இசைக்காக தென்னிந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குகிறது மாஜா. இணையம் வழி மாஜா நடத்தும்
உலகளாவிய யாழ் திருவிழாவிற்காக 30க்குமேற்பட்ட பிரபல கலைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள். இவ்விழா ஏப்ரல் 14-15 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இசைகலைஞர்களான சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், லியோன் ஜேம்ஸ், ஷாஷா திருப்பதி, தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழு ஆகியோருடன், தெற்காசிய புலம்பெயர்ந்த கலைஞர்களான முகன் ராவ், ஷான் வின்சென்ட் டி பால் போன்ற கலைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.