ஐ.பி.எல் மெகா ஏலம் முதல் நாள் நிறைவு..!

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டிற்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நிறைவடைந்தது.
ஐ.பி.எல் மெகா ஏலம் முதல் நாள் நிறைவு..!
Published on

மும்பை,

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. அதற்கான மெகா ஏலம் மதியம் 12 மணிக்கு இன்று தொடங்கியது.

இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீராகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் தவானின் பெயர் தான் முதலில் வாசிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷனை அதிகபட்சமாக ரூ 15.25 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.

இந்த மெகா ஏலத்தில் முக்கிய வீரர்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை அவர்களின் அடிப்படைத்தொகையான ரூ. 2 கோடிக்கு யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

மதியம் தொடங்கிய இந்த மெகா ஏலம் இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது. இரண்டாம் நாளாக நாளை காலை மீண்டும் இந்த ஏலம் தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com