2-ம் நிலை காவலர் பணி: பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது-முதல் நாளில் 182 பேர் தேர்ச்சி

சேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 182 பெண்கள் தேர்ச்சி பெற்றனர்.
2-ம் நிலை காவலர் பணி: பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது-முதல் நாளில் 182 பேர் தேர்ச்சி
Published on

சேலம்:

சேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 182 பெண்கள் தேர்ச்சி பெற்றனர்.

பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நடந்தது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 913 பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 7 நாட்கள் நடைபெற்ற உடல்தகுதி தேர்வில் 1,812 பேர் தேர்ச்சி பெற்றனர்.

182 பேர் தேர்ச்சி

இந்த நிலையில் பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 255 பேர் பங்கேற்றனர். 145 பேர் பங்கேற்கவில்லை. பின்னர் பெண்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடந்தது. இந்த தேர்வு மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா, சென்னை மதுவிலக்கு சிறப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முதல் நாள் முடிவில் 182 பெண்கள் தேர்ச்சி பெற்றனர். 2-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் உடல்தகுதி தேர்வில் பங்கேற்பதற்காக ஒரு திருநங்கை உள்பட 465 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com