தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணன்காரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த காந்தியின் மகன் ராஜபாண்டி(வயது 30). இவரது மனைவி ஐஸ்வர்யா(27). இவர் சம்பவத்தன்று கோயம்புத்தூர் மாவட்டம் நெடுஞ்சேரிபுதூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு மீண்டும் ஊர் திரும்பவில்லை. இதனையடுத்து ராஜபாண்டி, ஐஸ்வர்யாவின் தாய் வீடு, உறவினர்கள் வீடுகளில் விசாரித்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் தா.பழூர் போலீசில் ராஜபாண்டி அளித்த புகாரில், ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் விசாரித்து தனது மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

