சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனா
சிறுமிக்கு பாலியல் தொல்லை
Published on

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் கட்டிட தொழிலாளி. நேற்று அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com