மின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது - சைபர் கிரைம்

புதுவையில் மின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது என சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது - சைபர் கிரைம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் செல்போன் எண் மற்றும் வாட்ஸ்அப்புக்கு சமீபகாலமாக குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது. அதில் அன்புள்ள வாடிக்கையாளரே உங்களின் மின் இணைப்பு இன்று இரவு 9.30 மணிக்கு துண்டிக்கப்படும். எனவே உடனடியாக 6304872317 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என அனுப்பப்படுகிறது.

இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. அதில் கூறப்பட்டுள்ள எண், ஆன்லைன் வழியாக மோசடி கும்பலுக்கு தொடர்புடையது என்பது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என எச்சரிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com