விட்டுக்கொடுக்கும் மகிழ்ச்சி

விட்டுக்கொடுப்பதால் நாம் தோல்வியடைந்துவிட்டோம்; நாம் நினைத்தது கிடைக்காது, அதனால் கஷ்டம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. விட்டுக்கொடுக்கும்போதுதான் இயல்பாக கிடைப்பதைவிட அதிகமாக பெறுகிறோம்.
விட்டுக்கொடுக்கும் மகிழ்ச்சி
Published on

மக்கு தேவையானவற்றை பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி பெரியது. நம்மை சேர்ந்தவர்களின் தேவைக்காக, நமது தேவையை விட்டுக்கொடுப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அதைவிட பெரியது. விட்டுக்கொடுத்தல் என்பது மகிழ்ச்சி மற்றும் அன்பு பகிர்தலின் ஊடகமாக விளங்குகிறது.

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்று பழமொழி உண்டு. விட்டுக்கொடுப்பதால் நாம் தோல்வியடைந்துவிட்டோம்; நாம் நினைத்தது கிடைக்காது, அதனால் கஷ்டம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. விட்டுக்கொடுக்கும்போதுதான் இயல்பாக கிடைப்பதைவிட அதிகமாக பெறுகிறோம்.

தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்கள் என அனைவரிடமும் விட்டுக்கொடுத்துப் போவது பல நேரங்களில் இயல் பான ஒன்று. ஆனால், நமக்கு அறிமுகமாகாதவர், பழக்கம் இல்லாதவர் என மூன்றாம் நபருக்கு நாம் ஒரு விஷயத்தை விட்டுக்கொடுக்கும்போது, நம் வாழ்வின் புதிய அனுபவத்தை நம்மால் உணர முடியும். இதனால் புதிய உறவு, அனுபவம், மகிழ்ச்சி, வாய்ப்பு மற்றும் வெற்றி கிடைக்கலாம். ஆகையால் மகிழ்ச்சியில் உறவுகள், நட்புகள் மலர, விட்டுக்கொடுத்து ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com