வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு

பேத்தமங்களா அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு
Published on

கோலார் தங்கவயல்:

கோலாரை அடுத்த பேத்தமங்களா புறநகர் கஞ்சேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் தங்க, வெள்ளி நகைகளை திருடிவிட்டு சென்றனர். நேற்று காலை மஞ்சுநாத் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அவர் சந்தேகத்தில் உள்ளே சென்று பீரோவை சோதனை செய்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதுகுறித்து பேத்தமங்களா புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மநபர்கள் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மஞ்சுநாத் அளித்த புகாரின் பேரில் பேத்தமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com