பெயர் வெறும் வெத்து அடையாளம் தான்.. கவனம் ஈர்க்கும் குதிரைவால் டிரைலர்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரைவால்' திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பெயர் வெறும் வெத்து அடையாளம் தான்.. கவனம் ஈர்க்கும் குதிரைவால் டிரைலர்
Published on

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குதிரைவால். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல், சவுமியா ஜகன் மூர்த்தி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் மார்ச் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று குதிரைவால் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குதிரைவால் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com