சென்னை விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் இடம் பெற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் இடம் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை விமான நிலையத்தில் நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் இடம் பெற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

வி.பி.சிங், பிரதமராக இருந்தபோது (1989) முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, சென்னை பன்னாட்டு விமானநிலையத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமானநிலையத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டப்பட்டன.

இப்போது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இருபெரும் தலைவர்களின் பெயர்களும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வை புண்படுத்தும் வேலையில் மத்திய பா.ஜ.க. ஆட்சி ஈடுபட்டு வருகிறது.

இது மிகவும் கண்டனத்துக்குரியது. உடனடியாக ஏற்கனவே இருந்து வந்த அண்ணா, காமராஜர் பெயர் இடம்பெற வேண்டும். இதுகுறித்து தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உரத்த உரல் எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com