ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த தேசியவாத காங். பிரமுகர் மீது வழக்கு

தானேயில் சட்டவிரோதமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்
ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த தேசியவாத காங். பிரமுகர் மீது வழக்கு
Published on

தானே, 

தானேயில் சட்டவிரோதமாக உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 8-ந்தேதி மாநகராட்சியினர் ராபோடி பகுதியில் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த தேசியவாத காங்கிரஸ் தானே மாவட்ட தலைவர் சுகாஸ் தேசாய் அங்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்து உள்ளார். மீறி அகற்றினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com