சமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

பொதுவாக, வீடுகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை உண்டாக்கும் நெருப்பு கிட்டத்தட்ட 85 சதவிகிதம் என்ற அளவில் சமையலறையிலிருந்து பரவுவதாக அறியப்பட்டுள்ளது.
சமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்
Published on

பொதுவாக, வீடுகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை உண்டாக்கும் நெருப்பு கிட்டத்தட்ட 85 சதவிகிதம் என்ற அளவில் சமையலறையிலிருந்து பரவுவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமையலறையில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி காணலாம்.

1. அதிகப்படியான வாசனை கொண்ட பொருட்கள் சமையலறையில் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனென்றால், கியாஸ் லீக் ஆகும் பட்சத்தில் அதை உடனடியாக உணர்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2. சமையல் வேலைகளின்போது கியாஸை திறந்து விட்ட பிறகு, வரக்கூடிய செல்போன் அழைப்புகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. அந்த அழைப்பு காரணமாக கவனம் திசை திரும்புவதால் பிரச்சினைகள் வரலாம்.

3. பொதுவாக, சமையலறைகளுக்கான மின்சார ஸ்விட்ச் அமைப்புகள் வெளிப்புறமாக அமைக்கப்படுவதால் பல பிரச்சினைகளை தவிர்க்கப்படும் என்று பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

4. சமையல் வேலைகள் முடியும் வரையில் எக்ஸ்ஹாஸ்ட் பேன்கள் தொடர்ந்து இயங்கும்படி கவனித்துக்கொள்ளவேண்டும்.

5. எளிதாக நெருப்பினால் பாதிக்கப்படாத மாடுலர் டைப் கிச்சன் அமைப்புகளாக சமையலறையில் அமைப்பது அத்தியாவசியமானது.

6. கியாஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், பாத்திரங்களை மாற்றுவது தவறானது. குறிப்பாக, அந்த நிலையில் எண்ணெய் அடங்கிய வாணலிகள் வைக்கப்படுவது, அல்லது எடுக்கப்படுவது கூடாது. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகுதான் மேற்கண்டவற்றை செய்வது பாதுகாப்பானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com