கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(வயது 75). இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவரது உறவினர்கள் அவரை தேடினர். அப்போது கிணற்றுக்குள் ராமசாமி இறந்து கிடந்ததை அறிந்த உறவினர்கள், இது பற்றி பாடாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் இருந்து ராமசாமி உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com