சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் - கமல் உருக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் - கமல் உருக்கம்
Published on

இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகரும் 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்னும் எஸ்பிபி இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகர் கமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் என்று பதிவு செய்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com