கிணற்றில் விஷ வாயு தாக்கி பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை : மாநகராட்சி அறிவிப்பு

தானே மாவட்டம் கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள சாக்கி நாக்காவில் பழமையான கிணற்றை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது கிணற்றுக்குள் 3 பேர் சிக்கிக் கொண்டனர்.
கிணற்றில் விஷ வாயு தாக்கி பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை : மாநகராட்சி அறிவிப்பு
Published on

தானே,

தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்களான ஆனந்த் சேலார்(வயது 48), பிராமோத் வாக்சவு(44) ஆகிய இருவர் உள்பட 5 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினர், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சென்றதால் தான் இறந்ததாக கூறி தீயணைப்பு துறையை குற்றம் சாட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com