வதந்திக்கு பதிலடி கொடுத்த ஆபாச பட நடிகை

ஆபாச பட நடிகை மியா கலீபா குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
வதந்திக்கு பதிலடி கொடுத்த ஆபாச பட நடிகை
Published on

பொதுவாகவே இணையத்தில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத நடிகர் நடிகைகளை வைத்து டிரோல் செய்யும் கலாச்சாரம் பரவலாக இருந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சினிமா பிரபலங்களே. சமீபத்தில் ஆபாச பட நடிகை மியா கலீபா இறந்து விட்டதாக ஒரு செய்தியை சில விஷமிகள் டிரோல் செய்து விட்டனர். இதனால் மியா கலீபாவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் கடும் கோபத்தில் இருந்த மியா கலீபா நான் இன்னும் இறக்கவில்லை. உயிரோடு இருப்பதாகவே உணர்கிறேன் என்று புகைப்படத்தை பதிவிட்டு டிரோல் செய்தவர்களுக்கு பதிலடிக்கொடுத்திருக்கிறார். மியா கலீபாவின் முகநூலில் இவருடன் வாழ்ந்த நினைவுகளைப் பகிருங்கள் என்று எழுதப்பட்டிருந்ததால் நடந்த குழப்பம் என்று அவருடைய ரசிகர்கள் விளக்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com