வேலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Published on

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் எனவும், பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்த்தனர்.

போக்குவரத்து கழக அதிகாரிகளும் பஸ்களை இயக்க ஆயத்தமாகினர். பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்கள் சுத்தம் செய்யப்பட்டது. பஸ்களை இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வேலூர் மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. பயணிகள் அமரும் இடம் போன்றவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதில் சில மாவட்டங்கள் தவிர்த்து வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலூர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com