குன்றத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் நிறுத்தப்பட்ட பூந்தண்டலம் ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு நடந்தது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி இரண்டாம் கட்டமாக குன்றத்தூர் ஒன்றியம், ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் நிறுத்தப்பட்ட பூந்தண்டலம் ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு நடந்தது
Published on

இந்நிலையில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பூந்தண்டலம் கிராம ஊராட்சி புதுச்சேரி வாக்குச்சாவடி எண் 173-ல் 12-வது ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்கு சீட்டுகளில் சின்னங்கள் தவறாக பதிவாகி இருந்ததால் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. நேற்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து நிறுத்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு நேற்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com