தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் நந்து (வயது 26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலவானகிரியை சேர்ந்த ராமதாஸ் மகன் ராமு என்பவரும் வேலை செய்து வந்தார். நந்துவும், ராமுவும் நண்பர்கள் ஆவர். இவர்கள் நிறுவனத்தில் வேலை செய்தபோது ராமுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நந்து அவரை ஊருக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் நண்பரின் வீட்டில் தங்கியபோது ராமுவின் தங்கை இலக்கியா (26) வுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இலக்கியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் காதல் ஜோடி 2 பேரும் தர்மபுரி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். நாங்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இலக்கியா குடும்பத்தினர் எங்களை மிரட்டி வருகின்றனர். எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதைத்தொடர்ந்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இரு குடும்பத்தினரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com