ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியது

ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியது
Published on

விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ஜீவி. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. இதனிடையே, ஜீவி படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகர் வெற்றியும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஜீவி-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளார். ஜீவி இரண்டாம் பாகத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள்த்தில் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com