சென்னை மெரினாவில் 2-ம் கட்ட நீலக்கொடி கடற்கரை திட்டப் பணிகள் விறுவிறுப்பு

கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
சென்னை மெரினாவில் 2-ம் கட்ட நீலக்கொடி கடற்கரை திட்டப் பணிகள் விறுவிறுப்பு
Published on

சென்னை,

நீலக்கொடி என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தூய்மையான கடற்கரைக ளுக்கு வழங்கப்படும் சான்றாகும். கோவளம் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை மெரினா, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் உள்ள கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற் கரை சான்றிதழ் பெறுவதற்கான திட்டப் பணிகளை மாநகராட்சி செயல்ப டுத்தி வருகிறது. மெரினாவில் 4 கட்டங்களாக நீலக்கொடி கடற்கரை பணிகள் நடைபெறுகிறது. இதில், மெரினா நீச்சல் குளம் அருகே ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட் டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியை நாள் தோறும் 60 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள பகுதியில் 2-ம் கட்ட திட்டப் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணி கள் முடிவுற்ற நிலையில் இம்மாத இறுதியில் 2-ம் கட்ட திட்டப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது.

அதன்படி, இப்பகுதியில் 60 மூங்கில் இருக்கைகள், 30 மூங்கில் குடை கள், 4 கண்காணிப்பு கோபுரங்கள், 4 இடங்களில் சிறுவர்கள் விளை யாட்டு பகுதி, 2 படிப்பகம், 2 இடங்களில் 'செல்பி' பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெரினாவில் 2-ம் கட்ட நீலக்கொடி கடற்கரை திட்டப் பணிகள் 90 சதவீ தம் முடிவடைந்துவிட்டது. ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தனித்தனியாக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் குப்பை போடுவதை தவிர்க்க மூங்கில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மெரினாவில் பல்வேறு பகுதிகளில் மஞ்சப்பை எந்திரம் வைக்கப்பட உள்ளது. இப்பணிகள் வரும் 17-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com