ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து காணப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. 87 விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

12 வியாபாரிகள் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது. வரத்து குறைந்தும் விலை அதிகரிக்கவில்லை.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

விலை குறைந்தது

ஏலத்திற்கு விவசாயிகள் 588 மூட்டை கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.

அதன்படி 320 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.115 முதல் ரூ.133.85 வரையும், 268 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.78 முதல் ரூ.100.50-க்கும் ஏலம் போனது.

கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது. வழக்கமாக வரத்து குறைந்தால் விலை அதிகரிக்கும். ஆனால் எண்ணெய் மார்க்கெட் விலை குறைந்து உள்ளது.

இதன் காரணமாக கொப்பரை தேங்காய் விலையும் குறைந்து உள்ளது. ஏலத்தில் ரூ.29 லட்சத்து 20 ஆயிரத்து 561-க்கு வர்த்தகம் நடந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com