முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சப்தம் படக்குழு

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'. ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சப்தம் படக்குழு
Published on

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இதில் நடிகர் ஆதி, சிந்து மேனன், நந்தா துரைராஜ், சரன்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமனின் இசையில் 'மழையே மழையே' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

சமீபத்தில் ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மூணார் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. இதனை படத்தின் இயக்குனர் அறிவழகன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com