இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயமானார்.
இளம்பெண் மாயம்
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகள் கவிதா(வயது 27). இவர் நேற்று முன்தினம் காலை குரூப்-4 தேர்விற்கு பதிவு செய்துவிட்டு, வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தா.பழூர் கடை வீதிக்கு சென்றார். பின்னா அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசன் தா.பழூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com