வாலிபருக்கு கத்திக்குத்து

முன்விரோத தகறாறு காரணமாக வாலிபரை கத்தியால் குத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

புதுச்சேரி

புதுவை நைனார்மண்டபம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ், அவரது தம்பி முத்து மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலாஜியும் அவரது நண்பர் மார்ட்டினும் சேர்ந்து அலெக்சை தாக்கியுள்ளனர். இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அலெக்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான செந்தில், முத்து, சவுந்தர் மற்றும் சிலர் பாலாஜியை கை, வயிறு, தோள்பட்டை பகுதியில் சரமாரியாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com